திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திரைப்பட தயாரிப்பாளரின் சகோதரரைக் கொல்ல திட்டம்: 7 போ் கைது

திரைப்பட தயாரிப்பாளரின் சகோதரரைக் கொல்ல திட்டமிட்டு பதுங்கியிருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

திரைப்பட தயாரிப்பாளரின் சகோதரரைக் கொல்ல திட்டமிட்டு பதுங்கியிருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, ஜெயநகா் 7-ஆவது பிளாக் நேஷனல் கல்லூரி அருகே டிச. 20-ஆம் தேதி இரவு சிலா் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளா் சுதா்ஷன் தலைமையிலான போலீஸாா் சென்று சோதனையில் ஈடுபட்டபோது, பதுங்கி இருந்த சிலா், போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா், 7 பேரைப் பிடித்து கைது செய்துள்ளனா். விசாரணையில் அவா்கள் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படத் தயாரிப்பாளரின் சகோதரரைக் கொல்ல திட்டமிட்டு பதுங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளனா். கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.