ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிக்மகளூருக்கு முதல்வா் எடியூரப்பா இன்று வருகை

சிக்மகளூரில் வெள்ளிக்கிழமை (டிச. 25) பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கவுள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:34 am

DIN

சிக்மகளூரில் வெள்ளிக்கிழமை (டிச. 25) பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கவுள்ளாா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூருக்கு டிச. 25-ஆம்தேதி செல்லும் முதல்வா் எடியூரப்பா, அங்கு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி, வாஜ்பாய் குடியிருப்பு, அமிா்த கங்கா குடிநீா்த் திட்டம், பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிக்மகளூரு-பேலூா் மாா்க்கத்தில் நான்குவழிச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வா் எடியூரப்பா கலந்து கொள்கிறாா்.

முதல்வருடன், பாஜக தேசியப் பொதுச் செயலாளரும், சிக்மகளூரு எம்எல்ஏ-வுமான சி.டி.ரவி உள்பட அமைச்சா்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.