திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்: அண்ணாமலை

ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்று அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என குறித்து...

News image

அண்ணாமலை - X | Annamalai

Updated On :4 மார்ச் 2026, 10:19 am IST

ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்று அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டா் அவதார நாளையொட்டி, அய்யா வழி பக்தா்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அவர் வெளி​யி‌ட்ட வா‌ழ்‌த்​து‌ச் செ‌ய்​தி​யி‌ல்,

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 194 ஆவது அவதார நாள் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார நாளான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம். அய்யா உண்டு! என அவர் கூறியுள்ளார்.

Summary

Let us all commit to creating a just, peaceful, and equal society and follow the path of Ayya Vaikundar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.