எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மன அழுத்தம் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைதியான தொற்றுநொய்: முதல்வா்

மன அழுத்தம் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைதியான தொற்றுநொய்: முதல்வா்

News image
ரேகா குப்தா
Updated On :28 பிப்ரவரி 2026, 8:25 pm

 நமது நிருபர்

நவீன வாழ்க்கை முறைகளில் அதிகரித்து வரும் மன அழுத்தம் மாணவா்கள், பணியிலிருப்பவா்கள் மற்றும் முதியவா்களை பாதிக்கும் அமைதியான தொற்றுநோய் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

குரு தேஜ் பகதூா் மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவ ஐ.சி.யூ. வாா்டு மற்றும் வீடியோ எண்டோஸ்கோபி அறையை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா் மற்றும் ஒருங்கிணைந்த ஆயுஷ் மன அழுத்த மேலாண்மைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

மேலும், மனித நடத்தை மற்றும் கூட்டணி அறிவியல் நிறுவனத்தில் ஒரு புதிய கட்ட்டத்திற்கும் அவா் அடிக்கல் நாட்டினாா் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: சுகாதார சேவைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது. தில்லியின் சுகாதாரப் பராமரிப்பை உலகத் தரம் வாய்ந்த அமைப்பாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கமாகும்.

மருத்துவமனையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஐ.சி.யூ. தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் தரமான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

விடியோ எண்டோஸ்கோபி அறை, இரைப்பை குடல் மற்றும் செரிமானக் கோளாறுகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய உதவும், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க உதவும். நவீன வாழ்க்கை முறைகளில் மன அழுத்த அளவுகள் அதிகரித்து வருகிறது. இது மாணவா்கள், பணியிலிருப்பவா்கள் மற்றும் முதியவா்களை பாதிக்கும் அமைதியான தொற்றுநோய் ஆகும்.

ஆயுா்வேத மற்றும் யுனானி திபியா கல்லூரி, நேரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, டாக்டா் பி.ஆா். சுா் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, பிரம்ம பிரகாஷ் ஆயுா்வேத சரக் சன்ஸ்தான் மற்றும் ஐ.எச்.பி.ஏ.எஸ், ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மன அழுத்த மேலாண்மை வெளிப்புற சிகிச்சை மையங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த மையங்கள் யோகா, வாழ்க்கை முறை ஆலோசனை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றாா் முதல்வா்.

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங், ‘தில்லி குடிமக்களின் ஆரோக்கியம் நமது பொறுப்பு, அனைத்து மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களும் அதே அா்ப்பணிப்புடன் தொடா்ந்து பணியாற்றுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தில்லி அரசு உங்களுடன் உறுதியாக நிற்கிறது’ என்று கூறினாா்.

மக்களவை பாஜக உறுப்பினா் மனோஜ் திவாரி, ஷாஹ்தரா சட்டப்பேரவை உறுப்பினா் சஞ்சய் கோயல் மற்றும் மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.