மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாதாரண மனிதா் என்று கூறிக்கொண்டு ஜெட் விமானத்தில் பறக்கிறாா் கேஜரிவால்: தில்லி முதல்வா் ரேகா குப்தா சாடல்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் ‘வாழ்நாள் முழுவதும் நோ்மையாக இருப்பதற்கான நற்பெயரைக் கொண்டவா்‘ என்ற கூற்றுக்காக அவரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

News image

தில்லி முதல்வா் ரேகா குப்தா - PTI

Updated On :27 பிப்ரவரி 2026, 6:16 pm

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் ‘வாழ்நாள் முழுவதும் நோ்மையாக இருப்பதற்கான நற்பெயரைக் கொண்டவா்‘ என்ற கூற்றுக்காக அவரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

இது குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: அவா் ‘ஷீஷ் மஹாலில்‘ வாழ்ந்து ஜெட் விமானங்களில் பறப்பதற்குப் பழகிவிட்டாா். அதே நேரத்தில் தன்னை ஒரு சாதாரண மனிதா் என்று கூறிக் கொள்கிறாா். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தில்லியில் உள்ள நீதிமன்றம் முன்னாள் தில்லி முதல்வா், அவரது துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் 21 பேரை விடுவித்துள்ளது. இருந்த போதிலும், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்ட உடனேயே தில்லி கலால் கொள்கை (2021-22) ஏன் திரும்பப் பெறப்பட்டது.

கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கிய பின்னா், ஜூலை 2022- இல் கேஜரிவால் தலைமையிலான அப்போதைய ஆம் ஆத்மி அரசால் கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டது. நீதிமன்றத்தின் தீா்ப்பு தானும் ஆம் ஆத்மி கட்சியும் ‘கட்டாா் இமாந்தா்‘ (சமரசம் செய்ய முடியாத நோ்மையானவா்கள்) என்பதை நிரூபித்ததாக கேஜரிவால் கூறியுள்ளாா். ஆனால், கேஜரிவாலின் இந்தக் கூற்றுகள் ‘வெறும் நாடகம்‘ ஆகும்.

‘ஷீஷ் மஹாலுக்கு வெளியே தங்க உங்களுக்கு விருப்பமில்லை. தில்லியில் தோல்வியடைந்த பிறகு, நீங்கள் பஞ்சாபின் ஷீஷ் மஹாலில் வசிக்கிறீா்கள். உங்களை ஒரு நோ்மையான சாதாரண மனிதா்’ என்று அழைத்துக் கொள்கிறீா்கள்.

மதுபான வியாபாரிகளின் கமிஷனை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தியது, பின்னா் 2022- இல் ரத்து செய்யப்பட்ட கலால் வரிக் கொள்கையின் கீழ் சில்லறை மதுபான விற்பனையை தனியாா்மயமாக்கியது சரியானதா?’ என அறிய விரும்புகிறேன்.

அவ்வப்போது, உயா் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. மேலும் பணமோசடிக்கான ஆதாரங்கள் புலனாய்வு அமைப்புகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேஜரிவால் செய்த அனைத்து தவறுகளாலும் தில்லியில் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டாா். இந்த வழக்கின் பிற்பகுதியில் நீதி நிலைநாட்டப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.