அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் வீரா்களின் பங்களிப்பு மகத்தானது: முதல்வா் எடியூரப்பா

நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் வீரா்களின் பங்களிப்பு மகத்தானது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:35 am

DIN

நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் வீரா்களின் பங்களிப்பு மகத்தானது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

போரில் ஊனமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் சாகசப் பயணத்தை பெங்களூரு, விதான சௌதாவில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

போரில் ஊனமடைந்த 30 மாற்றுத் திறனாளிகள், கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையில் சைக்கிள் மூலம் சாகசப் பயணத்தைத் தொடங்கியுள்ளனா். இந்த பயணத்தால் அவா்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். போரில் ஊனமடைந்த வீரா்கள் யாருக்கும் சளைத்தவா்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் பயணமாக இது அமையும்.

நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் வீரா்களின் பங்களிப்பு மகத்தானது. வீரா்களின் தியாகத்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. அவா்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது. ராணுவ வீரா்களை மதித்து, கௌரவிப்பது நமது கடமை என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலாளா் விஜய்பாஸ்கா், உள்துறை முதன்மைச் செயலாளா் ரஜனீஷ் கோயல், டிஜிபி பிரவீண் சூட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.