ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

அதிமுகவில் காளியம்மாள் இணைந்தது பற்றி...

Kaaliyammaal

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

Published On :13 மார்ச் 2026, 10:52 am IST

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை நேரில் சந்தித்த காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் பேசியதாவது:

”சாதாரண குடும்பத்தில் இருந்து அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழனின் தலைமை கீழ் செயல்படவுள்ளேன். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இந்த தேர்தல் மாற்றத்தை கொடுக்கும்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தலைமை முடிவு செய்யும். அதிமுகவின் 2010-ஆம் ஆண்டு மாவட்டப் பொறுப்பில் இருந்துள்ளேன். தற்போது கட்சி தலைமை முடிவு செய்து பொறுப்பு வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 2019 மக்களவைத் தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.

Summary

Kaliyammal joined AIADMK!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.