அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் விலகல்! திமுகவில் இணைகிறார்?

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் விலகியுள்ளது பற்றி...

News image
நிலோபர் கபில்
Updated On :14 பிப்ரவரி 2026, 10:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏவும் அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

"நான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்தேன். தற்சமயம் எனது சொந்த சூழ்நிலை காரணமாக கழகத்தில் தொடர்ந்து பணிபுரிய இயலவில்லை. எனவே, நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை தாங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி மற்றும் கழக நிர்வாகிகளுக்கும். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிலோபர் கபீல் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.