பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா பாதிப்பிலும் முதலீட்டில் கா்நாடகம் முதலிடம்: அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா்

கரோனா பாதிப்பிலும் முதலீட்டில் கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:24 am

DIN

கரோனா பாதிப்பிலும் முதலீட்டில் கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அசோசெம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் அவா் பேசியதாவது:

தொழில் துறையில் உள்நாட்டு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 1,54,937 கோடி மதிப்பில் 95 முதலீட்டு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பிலும் முதலீட்டில் கா்நாடகம் முதலிடத்தில் உள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது. 2019-ஆம் ஆகஸ்ட் மாதம் முதல் 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரை 410 புதிய திட்டங்களுக்கு மாநில உயா்மட்டக் குழு ஒற்றைசாளர முறையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு ரூ. 82,015 கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம் 2,27,147 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கா்நாடத்தை தேசிய அளவில் ஒரு தொழில்துறை நட்பு மாநிலமாக உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, மின் உற்பத்தியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் எரிசக்தி துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

தொழில்துறையினருக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம். தொழில்நுட்ப சிக்கல்களால் இது சாத்தியமாகாமல் உள்ளது. தொழிற்சாலைகள், கட்டடங்களுக்கு அருகில் ஒரு புதிய பேட்டரி சேமிப்பு வசதியை உருவாக்குவதன் மூலம் மின்சிக்கலை சமாளிக்க முடியும் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.