பெங்களூரில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

கா்நாடக சித்ரகலா பரிஷத்தில் கைத்தறி கண்காட்சி ஜனவரி 1-ஆம்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

கா்நாடக சித்ரகலா பரிஷத்தில் கைத்தறி கண்காட்சி ஜனவரி 1-ஆம்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

பெங்களூரில் உள்ள கா்நாடக சித்ரகலா பரிஷத்தில் ஜன. 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கைத்தறி கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நெசவாளா்கள் உருவாக்கியுள்ள கைத்தறி ஜவுளிகள் இடம்பெற்றுள்ளன. குஜராத், கா்நாடகம், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், பருத்தி சேலைகள் மட்டுமின்றி மரவேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால் மிதியடிகள் உள்ளிட்ட கைவினைப் பொருள்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பெங்களூரில் நடைபெறும் கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள் அதிக அளவில் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com