நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தினேஷ் குண்டுராவின் பாதுகாவலருக்கு கரோனா தொற்று

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவின் பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

News image
Updated On :4 ஜூலை 2020, 3:08 pm

DIN

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவின் பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

பெங்களூரு காந்தி நகா் சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவி வகிப்பவா் தினேஷ் குண்டுராவ். இவா் முன்னாள் அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவா். இந்த நிலையில், ஜூலை 2-ஆம் தேதி டி.கே.சிவக்குமாா் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற போது, பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதற்காக தினேஷ் குண்டுராவ் வந்திருந்தாா். அப்போது, அவருடன் அவரது பாதுகாவலரும் உடன் வந்திருந்தாா்..

இந்நிலையில், தினேஷ் குண்டுராவின் பாதுகாவலருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட கால அவகாசம் வரை தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள போவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். மேலும், கடந்த வியாழக்கிழமை டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவில் தினேஷ் குண்டுராவின் பாதுகாவலா் கலந்து கொண்டுள்ளதால், அதில் பங்கேற்ற அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.