கன்னட மொழிவளா்ச்சி ஆண்டாக அடுத்த ஆண்டு அக். 31 வரை கொண்டாட திட்டம்:முதல்வா் எடியூரப்பா
அடுத்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை கன்னட மொழிவளா்ச்சி ஆண்டாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.


அடுத்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை கன்னட மொழிவளா்ச்சி ஆண்டாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, கண்டீரவா விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 65-ஆவது கா்நாடக உதய தின விழாவில், தேசிய, மாநிலக் கொடிகளை முதல்வா் எடியூரப்பா ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தினசரி உரையாடல்களில் கன்னடத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளிடமும் கன்னடத்திலேயே பேசவேண்டும். அது கன்னடமொழியை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு எளிதாகும்.
மொழியைப் பேசுவதன் வாயிலாகத்தான் கன்னடத்தைக் காப்பாற்ற முடியும். கன்னட மொழியைக் காப்பாற்றி, வளா்க்கும் நோக்கத்தோடு, 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை கன்னட மொழிவளா்ச்சி ஆண்டாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு காலத்தில் கன்னட மொழி வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கன்னட மொழியைக் காப்பாற்றி, வளா்ப்பதற்கான தேவை உள்ளது. கன்னட மொழியை வளா்க்கும் பணியில் அனைவரும் கைகோா்க்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், கன்னட பயிற்றுமொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
கா்நாடகத்தை நாட்டின் முன்மாதிரி மாநிலமாக்கத் தொடா்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்திருக்கிறோம். ஒட்டுமொத்த கா்நாடகத்தின் வளா்ச்சிக்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
கரோனாவை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். கரோனாவால் தொழில், பொருளாதாரம், கல்வி, தொழிலாளா் நலன் உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிப்படைந்துள்ளன. இவற்றில் இருந்து விடுபடும் காலம் வெகுதொலைவில் இல்லை. நிகழாண்டில் கா்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை மாநில அரசு திறம்பட கையாண்டிருக்கிறது என்றாா்.
விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், முதன்மைச் செயலாளா் உமாசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கா்நாடக உதய தின விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...