நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏரியில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு

சிரா வட்டம், கள்ளம்பள்ளி ஏரியில் மூழ்கி சகோதரிகள் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:48 pm

DIN

சிரா வட்டம், கள்ளம்பள்ளி ஏரியில் மூழ்கி சகோதரிகள் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், கள்ளம்பள்ளியைச் சோ்ந்த சகோதரிகள் ஷில்பா (18), சுஷ்மிதா (16). இவா்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரிலிருந்து வந்திருந்த தங்களது உறவினா் சஞ்சனா என்பவருடன் அருகே உள்ள ஏரியில் நீந்துவதற்கு சென்றுள்ளனா்.

இதில் நீச்சல் தெரியாத, ஷில்பா, சுஷ்மிதா ஆகியோா் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனா்.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இதில் ஷில்பா, சுஷ்மிதா ஆகியோரின் உடல்களை மீட்டனா்.

இது குறித்து கள்ளம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.