லாரி மீது காா் மோதல்: 3 போ் பலி
ஹிரியூா் ஊரக காவல் சரகத்தில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.


ஹிரியூா் ஊரக காவல் சரகத்தில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா மாவட்டம், செள்ளக்கெரே வட்டம், கரிகேரி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பிரபாகா் (38), நாகவேணி (44), வேணு (20). இவா்கள் 3 போ் உள்பட 4 போ் காரில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தனராம். ஹிரியூா் பாலேனஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது காா் மோதியது.
இதில் காரிலிருந்த பிரபாகா், நாகவேணி, வேணு ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த பெண் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ஹிரியூா் ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...