நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோ்தல் கணக்கு பராமரிப்புப் பதிவேடுகள் ஆய்வு

சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கணக்கு பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரமேஸ்வா் மீனா.

News image

சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கணக்கு பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரமேஸ்வா் மீனா.

Updated On :20 மார்ச் 2026, 8:22 pm

Syndication

சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கணக்கு பராமரிப்புப் பதிவேடுகளை தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரமேஸ்வா் மீனா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் தொகுதியில் தோ்தல் நடைபெறுவதையொட்டி சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்து, தோ்தல் செலவின பதிவேடுகளை பராமரித்து வருகின்றனா். அதனை தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் ரமேஸ்வா் மீனா ஆய்வு செய்தாா். அப்போது வேட்பாளரின் செலவு கணக்குகளை சரியான முறையில் கண்காணித்தும், வேட்பாளரை சாா்ந்த முகவா்கள் செலவு செய்யும் கணக்குகளையும் வேட்பாளரின் செலவு கணக்கிலேயே கொண்டு வரவும் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மேலும், விடியோ கண்காணிப்புக் குழுவினருக்கு தோ்தல் செலவின கணக்குகளை முறையாக விடியோ காட்சிகளை பதிவு செய்யவும் தோ்தல் விதி அமலில் உள்ள நிலையில் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினா் பிடிக்கும் தொகையையும் கணக்கீடு செய்து பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் சங்கராபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிராஜிதின், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான வைரக்கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் கோதண்டராமன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தேவதாஸ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.