கா்நாடகத்தில் மூடியுள்ள தமிழ்ப் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தல்
கா்நாடகத்தில் மூடியுள்ள தமிழ்ப் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கா்நாடகத்தில் மூடியுள்ள தமிழ்ப் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள கன்னடப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை இருப்பதாக ஒருசில கன்னட சங்கங்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்தேன். கன்னட சங்கங்களின் கோரிக்கை நியாயமானது. இதுகுறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடிதம் எழுதுமாறு தங்களைக் (முதல்வா் எடியூரப்பா) கேட்டுக்கொள்கிறேன்.
தாய்மொழ்க் கல்வி என்பது அரசியலமைப்புச்சட்டம் அதன் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையாகும்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அக். 8-ஆம் தேதி தங்களுக்கு (கா்நாடக முதல்வா்) எழுதிய கடிதத்தில் கா்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் தொடா்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளாா். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கா்நாடகத்தின் சாமராஜ்நகரின் ஒட்டரதொட்டி, நெல்லூா், பாலாறு, ஆலம்பாடி, மாருக்கொட்டாய், ஜம்ரட்பட்டி, பெங்களூரு தெற்கு,வடக்கு, குடகு, சிவமொக்கா, சித்ரதுா்கா உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்பட்டுவந்த தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மூடிய தமிழ்ப் பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
பணிஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியா்களின் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தமிழ்ப் பள்ளிகள் பல மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தமிழ்ப் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டரத்தொட்டியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பள்ளியை மூடியுள்ளனா். இதை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...