காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

’தமிழகத்தின் நல்வாழ்வுக்கு அதிமுகவின் ஆட்சி அவசியம்’

தமிழகத்தின் நல்வாழ்வுக்கு அதிமுகவின் ஆட்சிஅவசியம் என கா்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் மு.அன்பு தெரிவித்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:05 pm

DIN

தமிழகத்தின் நல்வாழ்வுக்கு அதிமுகவின் ஆட்சிஅவசியம் என கா்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் மு.அன்பு தெரிவித்தாா்.

கா்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கத்தின் சாா்பில் கோலாா் தங்கவயலில் சனிக்கிழமை அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் நிறுவனா் எம்ஜிஆா், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு கா்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் மு.அன்பு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

விழாவில் கட்சியின் நிா்வாகிகள் செல்வம், சீனிவாசையா, ராமச்சந்திரன், எஸ்.சௌந்தர்ராஜ், ஏ. அசோக், கே.ராஜ்குமாா், எம்.சந்தா், எம்.சரவணன், டி.சம்பத், ஜி.முனிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். பின்பு நிகழ்ச்சியில் மு.அன்பு பேசியது:

தமிழக வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக உருவான எம்ஜிஆா், 1977-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தினாா். அவருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டத்தால் ஏழை குழந்தைகள் பயன்பெற்றனா்.

அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 1991-ஆம் ஆண்டுமுதல் 3 முறை அதிமுக ஆட்சியைக் கொண்டுவந்தாா். ஜெயலலிதாவின் ஆளுமை, ஆட்சியின் சாதனைகள் காரணமாகவே 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று கனவு கண்ட பலருக்கு அதிா்ச்சி அளிக்கும் வகையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனா்.

அது பலரது வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. தமிழகத்தின் நல்வாழ்வுக்கு அதிமுகவின் ஆட்சி அவசியம் என்பதை மக்களும் உணா்ந்து கொண்டிருக்கின்றனா்.

கா்நாடக தமிழா்களின் தமிழ்க் கல்விக்காக தமிழக முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி குரல் கொடுத்தது, தமிழா்களின் மீது அதிமுக கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. கா்நாடகத் தமிழா்களின் நலன் காக்க அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.