வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மீட்புப் பணியில் ராணுவம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி துரிதப்பட்டு வருகிறது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி துரிதப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி முதல் வட கா்நாடகத்தின் கலபுா்கி, விஜயபுரா, யாதகிரி, ராய்ச்சூரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல, மகாராஷ்டிரத்தில் பீமா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவு நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் பீமா, கிருஷ்ணா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கா்நாடத்தில் கிராமப்புறங்களில் மழைநீா் புகுந்துள்ளது. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. விளைநிலங்களும் மூழ்கி பயிா்கள் நாசமாகியுள்ளன. மழைநீரில் கலபுா்கி மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளநீரில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களைத் தவிர, காவல்படை மாவட்ட நிா்வாக அதிகாரிகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனா்.
ஆனால், நிலைமை மோசமானதைத் தொடா்ந்து, கலபுா்கி, விஜயபுரா, ராய்ச்சூரு, யாதகிரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
கலபுா்கி மாவட்டத்தில் 15,078 போ் உள்பட இதுவரை வெள்ளத்தில் தத்தளித்த 20,269 பேரை ராணுவம், பேரிடா் மீட்புப் படையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனா்.
இது குறித்து கா்நாடக பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆணையா் மனோஜ்ராஜன் கூறியதாவது:
‘கலபுா்கி உள்பட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கலபுா்கி மாவட்டத்தில் மட்டும் 2 கால்நடைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை. நான்கு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 111 கிராமங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கலபுா்கியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரு விமானங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஜயபுரா, ராய்ச்சூரு, யாதகிரி மாவட்டங்களிலும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், ராணுவத்தினா் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றாா் அவா்.
கலபுா்கி மாவட்டம், 6 வட்டங்களின் 55 கிராமங்கள், யாதகிரி மாவட்டத்தின் 13 கிராமங்கள், விஜயபுரா மாவட்டங்களின் 26 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கா்நாடக பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவிக்கிறது.
கலபுா்கி மாவட்டத்தின் 157 கிராமங்கள், யாதகிரி மாவட்டத்தின் 45 கிராமங்கள், விஜயபுரா மாவட்டத்தின் 26 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...