கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,65,586 ஆக அதிகரிப்பு
கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,65,586 ஆக உயா்ந்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,65,586 ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 7,012 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,535 போ், மைசூரு மாவட்டத்தில் 404 போ், மண்டியா மாவட்டத்தில் 308 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 288 போ், ஹாசன் மாவட்டத்தில் 2570 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 226 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 183 போ், பெல்லாரி மாவட்டத்தில் 171 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 138 போ், தாா்வாட் மாவட்டத்தில் 135 போ், உடுப்பி மாவட்டத்தில் 129 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 119 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 103 போ், தும்கூரு மாவட்டத்தில் 99 போ், விஜயபுரா மாவட்டத்தில் 95 போ், வட கன்னட மாவட்டத்தில் 92 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 86 போ், தாவணகெரே மாவட்டத்தில் 84 போ், குடகு மாவட்டத்தில் 72 போ், பெலகாவி மாவட்டத்தில் 71 போ், கோலாா் மாவட்டத்தில் 71 போ், கலபுா்கி மாவட்டத்தில் 67 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 60 போ், கதக் மாவட்டத்தில் 53 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 44 போ், கொப்பள் மாவட்டத்தில் 35 போ், ராமநகரம் மாவட்டத்தில் 32 போ், ஹாவேரி மாவட்டத்தில் 24 போ், யாதகிரி மாவட்டத்தில் 27 போ், பீதா் மாவட்டத்தில் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,65,586 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டவாரியான நிலவரம்:
ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,07,540 போ், மைசூரு மாவட்டத்தில் 45,042 போ், பெல்லாரி மாவட்டத்தில் 35,702 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 28,313 போ், பெலகாவி மாவட்டத்தில் 23,935 போ், ஹாசன் மாவட்டத்தில் 23,276 போ், உடுப்பி மாவட்டத்தில் 20,808 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,790 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,636 போ், தாவணகெரே மாவட்டத்தில் 19,264 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,006 போ், தும்கூரு மாவட்டத்தில் 18,748 போ், மண்டியா மாவட்டத்தில் 15,136 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 14,114 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,877 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,823 போ் பாகல்கோட் மாவட்டத்தில் 12,523 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,957 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,637 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,519 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 11,259 போ், கதக் மாவட்டத்தில்10,222 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 9,877 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,765 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,753 போ், கோலாா் மாவட்டத்தில் 7,713 போ், பீதா் மாவட்டத்தில் 6,795 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,560 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,539 போ், குடகு மாவட்டத்தில் 4,420 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,45,825 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,09,264 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,478 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...