நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்பு வேலி.

News image

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்பு வேலி.

Updated On :20 மார்ச் 2026, 6:58 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்பு வேலிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையாக கம்பம்மெட்டு மலைச் சாலை அமைந்துள்ளது. 8 கி.மீ. தொலைவில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்தச் சாலையில் நாள்தோறும் பயணிகள் பேருந்து , சுற்றுலா வாகனம், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தச் சாலையோரங்களில் ஆபத்தான இடங்களில் அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்பு வேலிகள் ஆங்காங்கே சேதமடைந்து விட்டன. எனவே, இந்த இரும்புத் தடுப்பு வேலிகளை உடனுக்குடன் சீரமைத்து, இந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.