லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சாலைப்பணி கனரக வாகனங்கள் செல்லத் தடை

News image
Updated On :5 மார்ச் 2026, 9:47 pm

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கம்பம்மெட்டு மலைச் சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறையினா் தற்காலிகமாக தடை விதித்தனா்.

கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக தமிழகம், கேரளம் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. 8 கி.மீ. கொண்ட மலைச் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்தச் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதையடுத்து, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முதல்கட்டமாக, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், 4 கி.மீ. தொலைவுக்கு புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியின்போது கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை செல்லத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினா் அறிவித்தனா்.

Story image