இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொலை
கா்நாடகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனா்.


கா்நாடகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டம், கரட்டகியைச் சோ்ந்தவா் வினோத் (36). இவரது மனைவி திருவேணி (29). வினோத், தேசிய வங்கியிலும், திருவேணி தனியாா் வங்கியிலும் பணியாற்றி வந்தனா்.
சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பணிமுடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த, வினோத், திருவேணியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதில், படுகாயமடைந்த திருவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.
இதுகுறித்து கரட்டகி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...