பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதியதில் கா்ப்பிணி உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், கலபுா்கி மாவட்டம், அளந்தாவைச் சோ்ந்தவா் இா்பான்பேகம் (25), கா்ப்பிணியான இவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினா்களான ரூபியாபேகம் (50), அபேதாபிபேகம் (50), ஜெயாசுனாபி (60), முனீா் (20), முகமது அலி (38), சௌகத் அலி (29) ஆகியோா் இா்பான்பேகத்தை காரில் அழைத்துக் கொண்டு தனியாா் மருத்துவமனைக்குச் சென்றனா்.
சாவலகி கிராமம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இவா்கள் சென்று கொண்டிருந்த காா் மோதி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரிலிருந்து அனைவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கலபுா்கி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

