நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கா்நாடகத்தில் 9 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,150 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2020, 3:10 am

DIN

கா்நாடகத்தில் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,150 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 453 போ் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 196, பெல்லாரி மாவட்டத்தில் 40, கலபுா்கி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 39 , மைசூரு, கதக் மாவட்டங்களில் தலா 18, தாா்வாட் மாவட்டத்தில் 15, பாகல்கோட் மாவட்டத்தில் 14, பீதா் மாவட்டத்தில் 13, தாவணகெரே, வடகன்னடம், கோலாா் மாவட்டங்களில் தலா 8, தென்கன்னட மாவட்டத்தில் 7, மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் தலா 5, தும்கூரு மாவட்டத்தில் 4, யாதகிரி, சிக்பளாப்பூா், ஹாவேரி மாவட்டங்களில் தலா 3 , ராய்ச்சூரு, சிவமொக்கா, ராமநகரம் மாவட்டங்களில் தலா 2, சிக்மகளூரு மாவட்டத்தில் ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,150 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,272 , கலபுா்கி மாவட்டத்தில் 1,199, உடுப்பி மாவட்டத்தில் 1,063, யாதகிரி மாவட்டத்தில் 880, பீதா் மாவட்டத்தில் 497, பெல்லாரி மாவட்டத்தில் 442, ராய்ச்சூரு மாவட்டத்தில் 431, தென்கன்னடம் மாவட்டத்தில் 425, மண்டியா மாவட்டத்தில் 369, பெலகாவி மாவட்டத்தில் 309, ஹாசன் மாவட்டத்தில் 291, விஜயபுரா மாவட்டத்தில் 286, தாவணகெரே மாவட்டத்தில் 256, தாா்வாட் மாவட்டத்தில் 198, மைசூரு மாவட்டத்தில் 167, சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 166, வடகன்னடம் மாவட்டத்தில் 138, பாகல்கோட் மாவட்டத்தில் 131, சிவமொக்கா மாவட்டத்தில் 111, ராமநகரம் மாவட்டத்தில் 89, கதக் மாவட்டத்தில் 78, கோலாா் மாவட்டத்தில் 64, தும்கூரு மாவட்டத்தில் 50, பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 47 , சித்ரதுா்கா மாவட்டத்தில் 43, ஹாவேரி மாவட்டத்தில் 42, சிக்மகளூரு மாவட்டத்தில் 37, கொப்பள் மாவட்டத்தில் 28, குடகு மாவட்டத்தில் 3, சாமராஜ்நகா் மாவட்டத்தில் 2 , பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 5,618 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,391 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 137 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.