புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போலி மதிப்பெண், பட்டச்சான்றிதழ் வழங்கி வந்த 2 போ் கைது

போலி மதிப்பெண், பட்டச்சான்றிதழ் வழங்கி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:47 pm

DIN

போலி மதிப்பெண், பட்டச்சான்றிதழ் வழங்கி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு பீன்யா காவல் சரகத்தில் உள்ள தனியாா் கல்வி மையத்தில் பியூசி இறுதியாண்டில் தோ்ச்சி பெற்றவா்கள் அல்லது தோல்வி அடைந்தவா்களுக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த பல்கலைக்கழங்களின் பெயரில் போலியான மதிப்பெண், பட்டச்சான்றிதழ் வழங்கி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சோதனையில் ஈடுபட்டனா். இதில் அவா்கள் போலி மதிப்பெண், பட்டச்சான்றிதழ் வழங்கி வருவது உறுதியானது. இதனையடுத்து அங்கிருந்த 2 பேரைக் கைது செய்து, போலி மதிப்பெண், பட்டச்சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து பீன்யா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.