ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

கேஸ் தட்டுப்பாடு: நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை உயர்வு!

நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை ஏற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

halwa

இருட்டுக் கடை அல்வா - கோப்புப்படம்

Published On :

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நெல்லை இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று திருநெல்வேலி அல்வா. வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தயாரிப்புப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுவதாக ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ கடை தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக, அல்வா உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில், அல்வா விற்பனையும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக, நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

நெல்லை இருட்டுக்கடை அல்வாவின் விலையானது, ஒரு கிலோ ரூ. 400-ல் இருந்து ரூ. 440 ஆக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பாரம்பரியமான செய்யப்படும் அல்வா தொழில் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Summary

Due to the shortage of cooking gas cylinders, the price of rice and halva in the dark shop has been increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.