புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை

ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:50 pm

DIN

ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழாக்கால கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்-07355-ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சனிக்கிழமைதோறும் ஹுப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.40 மணிக்கு எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

ரயில் எண்-07356-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல்-ஹுப்பள்ளி இடையேயான வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமைதோறும் எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.25 மணிக்கு ஹுப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் ஹாவேரி, ராணிபென்னூா், ஹரிஹா், தாவணகெரே, பீரூா், அரிசிகெரே, தும்கூரு, சிக்கபானவரா, பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், 5 பொதுப்பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.