அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை வெளியிட அந்நாட்டின் நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டு விழா வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய நாளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்ட விதிகளின்படி, உயிருடன் இருக்கும் அதிபரின் புகைப்படத்தை நாணயத்தில் வெளியிட அனுமதியில்லை. இதுதொடர்பான சட்டப்பூர்வத்தன்மை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டுக்கு தங்க நாணயங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு அதிகாரம் இருக்கும் நிலையில், அவரின் விருப்ப உரிமைக்கு இணங்க நாணயத்தை வெளியிட நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த 24 கேரட் தங்க நாணயம், ஒரு மேஜையின் மீது அதிபர் டிரம்ப் கைகளை வைத்திருப்பது போன்ற புகைப்படத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாணயத்தின் அளவை இறுதி செய்தவுடன், நாணயத்தை அச்சிட கருவூலச் செயலாளர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற டிரம்ப், நுண்கலை ஆணையத்தின் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து, தனது ஆதரவாளர்களை அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
A 24-karat gold coin with Trump's image engraved on it!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

