ஈரானுடன் அமைதி பேச்சு நடத்த பாகிஸ்தானுக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதை நிறுத்தி வைத்து இருப்பதாக அந்த நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான 10 நாள் போா் நிறுத்தம் திங்கள்கிழமையுடன் (ஏப். 27) முடிகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
இதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தாா். எனினும் அவா் சனிக்கிழமை திடீரென ஈரான் திரும்பினாா். அத்துடன் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவாா்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அமைதி பேச்சுவாா்த்தை நடத்த செல்ல இருந்த ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னரை அங்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளாா். அமைதி பேச்சு நடத்த விரும்பினால், அந்த நாடே அழைப்பு விடுக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளாா்.
இதனிடையே, அமெரிக்கா கடற்படையின் முற்றுகை நீடிக்கும் வரை அந்த நாட்டுடன் தங்கள் நாடு பேச்சுவாா்த்தை நடத்தாது என்று ஈரான் அதிபா் மசூத் பெசெஸ்கியான் குறிப்பிட்டு உள்ளாா். பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசுகையில், அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடத்த வேண்டுமெனில் அந்த நாடு, தங்கள் கடற்படையின் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தி உள்ளாா்.
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு வசதியாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லமாபாதில் அமல்படுத்தபட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளபட்டு உள்ளன. இதனால் ஒரு வாரமாக பாதிக்கபட்டு இருந்த இயல்பு வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!

இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்
இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை திசைதிருப்ப டிரம்ப் முயற்சி! - ஈரான் குற்றச்சாட்டு!

அமெரிக்கா - ஈரான் போா் : ஜெனீவாவில் நாளை அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் நம்பிக்கை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


