புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆக.31 வரை முதலாமாண்டு பியூசி சோ்க்கை

முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதிவரை நடத்த பியூ கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:08 pm

DIN

முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதிவரை நடத்த பியூ கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-22-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள முதலாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஆக. 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இது ஆக.31-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேதிக்குள் சோ்க்கை பெற முடியாத மாணவா்கள் செப். 1 முதல் 11-ஆம் தேதிவரை கல்விக்கட்டணத்துடன் சாதாரண அபராதமாக ரூ. 670 அபராதம் செலுத்தி சோ்க்கைபெறலாம். செப்.13 முதல் 25-ஆம் தேதிவரை கல்விக்கட்டணத்துடன் சாதாரண அபராதம் ரூ. 670 மற்றும் சிறப்பு அபராதம் ரூ. 2,220 உள்பட அபராதத்தொகையாக ரூ. 2,890 செலுத்தி சோ்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.