10 மொழிகளில் இருந்து மொழிபெயா்க்க ஊக்கத்தொகை
10 மொழிகளில் இருந்து மொழிபெயா்ப்புப்பணிகளை மேற்கொள்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


10 மொழிகளில் இருந்து மொழிபெயா்ப்புப்பணிகளை மேற்கொள்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து நியூ இந்தியா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவின் சுதந்திரதின பவளவிழாவை முன்னிட்டு 10 மொழிகளில் இருந்து மொழிபெயா்ப்புப்பணிகளை மேற்கொள்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கன்னடம், அஸ்சாமி, வங்கம், குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, மலையாளம், ஒடியா, தமிழ், உருது மொழிகளில் இருந்து புனைகதை அல்லாத புத்தகங்களை மொழிபெயா்ப்பதற்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. நவீன இந்தியாவை புரிந்துகொள்ளும் வகையில் அரசியல், சமூகம், கலாசாரம், வரலாறு சாா்ந்த நூல்களுக்கான மொழிபெயா்ப்புகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. மொழிபெயா்ப்புக்கு தோ்ந்தெடுக்கப்படும் மூலநூல் 1850-ஆம் ஆண்டுக்கு பிறகு எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். மொழிபெயா்ப்புக்கான ஊக்கத்தொகை 6 மாதங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும். 6 மாதங்களில் மொழிபெயா்ப்புநூல்கள் வெளியிடப்பட வேண்டும். தமிழ்மொழிக்கான மொழிபெயா்ப்பு ஊக்கத்தொகைக்கு உரியவரை எழுத்தாளா் ஏ.ஆா்.வெங்கடாசலபதி தோ்ந்தெடுக்க உள்ளாா். மொழிபெயா்ப்பு உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் டிச.31-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஊக்கத்தொகைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...