புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் நூல் இணையத்தில் ஆய்வு

விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய நூல் குறித்த ஆய்வு ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடக்கவிருக்கிறது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:04 pm

DIN

விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய நூல் குறித்த ஆய்வு ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடக்கவிருக்கிறது.

பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆா்டிஓ) விஞ்ஞானியும் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின்(என்டிஆா்எஃப்) இயக்குநருமான விடில்லிபாபு எழுதிய ‘போா்முனை முதல் தெரு முனை வரை’ புத்தகத்தின் ஆய்வரங்கம் இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

புதுதில்லி தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞான் பிரசாா் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் மற்றும் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி ஆகியோா் நூலைப் பற்றிய ஆய்வுரையை வழங்குகிறாா்கள். ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஏற்புரை வழங்குகிறாா்.

போா் முனை முதல் தெருமுனை வரை நூல், டிஆா்டிஓ நிறுவன விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப படைப்புகள் பொதுமக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பயன்படுகின்றன என்பதை விளக்கி தமிழில் எழுதப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப நூலாகும். நிகழ்வில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/37ள்ரஒம்6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.