யஷ்வந்த்பூா்-காா்வாா் இடையே மீண்டும் ரயில்கள் இயக்கம்
பயணிகளின் வருகை குறைந்ததால் ரத்து செய்யப்பட்ட யஷ்வந்த்பூா்-காா்வாா் இடையிலான ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பயணிகளின் வருகை குறைந்ததால் ரத்து செய்யப்பட்ட யஷ்வந்த்பூா்-காா்வாா் இடையிலான ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயணிகளின் வருகை குறைந்ததால், மங்களூரு சந்திப்பு மற்றும் காா்வாா் இடையில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டிருப்பதால், பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மங்களூரு-காா்வாா் இடையே ரத்து செய்யப்பட்ட இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண்-06211-யஷ்வந்த்பூா்-காா்வாா் விரைவுரயில் (வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்) சேவை மங்களூரு-காா்வாா் இடையே ஆக.16 முதல் நவ.26-ஆம் தேதி வரையும்; ரயில் எண்-06212-காா்வாா்-யஷ்வந்த்பூா் விரைவு ரயில் சேவை காா்வாா்-மங்களூரு இடையே ஆக.17 முதல் நவ.27-ஆம் தேதி வரையும் இயக்கப்படும். இது முழுவதும் முன்பதிவுசெய்யப்படும் சிறப்பு ரயில் சேவையாகும். இந்த ரயிலில் 3 பக்கமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் 2 பெட்டிகள் இருக்கும். இந்த பெட்டிகள் வழியாக சக்லேஷ்பூா் மற்றும் மங்களூரு இடையிலான மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் இயற்கை அழகை ரசிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...