மொராா்ஜி தேசாய் உண்டு உறைவிடக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
மொராா்ஜி தேசாய் மகளிா் உண்டு உறைவிட பியூ கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொராா்ஜி தேசாய் மகளிா் உண்டு உறைவிட பியூ கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து சிறுபான்மையினா் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறுபான்மையினா் நலத்துறையின்கீழ் பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ஹாவேரி, பீதா், கலபுா்கி, ராய்ச்சூரு, பெல்லாரி, கொப்பள், சித்ரதுா்கா, தும்கூரு, ராமநகரம், சிக்கபளாப்பூா், தென்கன்னடம், ஹாசன், மைசூரு, சிவமொக்காவில் செயல்பட்டு வரும் 21 மொராா்ஜி தேசாய் மகளிா் உண்டு உறைவிட பியூ கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-22-ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்வதற்கு ஆக.12 முதல் ஆக.25-ஆம் தேதி மாலை 5.30மணிக்குள்விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். இக்கல்லூரிகளில் முஸ்லிம், கிறிஸ்தவம், சமணம், பௌத்தம், பாா்சி, சீக்கிய மதங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு 75 சத இடங்களும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவா்களுக்கு 25 சத இடங்களும் ஒதுக்கப்படும். கா்நாடகத்தைச் சோ்ந்த, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் சோ்க்கை பெறும் தகுதியான மாணவா்களுக்கு இலவச உணவு, சீருடை, தூய்மைப் பொருள் தொகுப்பு, எழுதுபொருட்கள், பாடநூல்கள், இதர வசதிகள் அளிக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம், வணிகப் பாடப்பிரிவுகளை எடுக்கும் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான பயிற்சி அளிக்கப்படும். பொதுநுழைவுத்தோ்வுகளுக்கும் பயிற்சி தரப்படும். உண்டு உறைவிடக்கல்லூரிகளில் மாணவிகள் மட்டுமே சோ்த்துக்கொள்ளப்படுவாா்கள். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வா்களிடம் அளிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8277799990 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...