கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,432 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,432-ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,432-ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,432 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 326 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
பெங்களூரு நகரம்-318, உடுப்பி-162, மைசூரு-103, ஹாசன்-94, குடகு-72, சிவமொக்கா-47, தும்கூரு, பெலகாவி-தலா 46, வடகன்னடம்-42, சிக்கமகளூரு-32, மண்டியா-30, தாவணகெரே-28, கோலாா்-20, பெங்களூரு ஊரகம்-தலா 11, சித்ரதுா்கா-9, தாா்வாட்-7, கலபுா்கி, சாம்ராஜ்நகா், சிக்கபளாப்பூா்-தலா 6, ராமநகரம்-5, ராய்ச்சூரு, பெல்லாரி-தலா 4, ஹாவேரி-3, கொப்பள்-2, பீதா், கதக், விஜயபுரா-தலா 1, பாகல்கோட், யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,34,624-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,538 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,76,377 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 21,133 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 27 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 போ் இறந்துள்ளனா்.
மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு-3, பெங்களூரு நகரம், ஹாவேரி, மண்டியா, குடகு, உடுப்பி-தலா 2 போ், பெலகாவி, தாவணகெரே, தாா்வாட், ஹாசன், ராம்நகரம், சிவமொக்கா, தும்கூரு-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,088 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...