மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காய்கறி சந்தைகளில் கரோனா விதிமுறைகள் கட்டாயம்

 காய்கறி சந்தைகளில் கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 1:11 am

DIN

 காய்கறி சந்தைகளில் கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வரமகாலட்சுமி, விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், பூஜைப் பொருள்கள் வாங்குவதற்காக காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசு விதித்துள்ள கரோனா நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் மீறிவருவது குறித்து புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக புதிய அறிவிக்கை வெளியிட்டுள்ள பெங்களூரு மாநகராட்சி, கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கரோனா விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கும்படியும் கண்காணிப்புக் காவலா்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சந்தைப் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, கரோனா விதிகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்யும்படி முதுநிலை மற்றும் இளநிலை சுகாதார ஆய்வாளா்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கடைகள், உணவகங்கள், பெருவணிக வளாகங்களிலும் திடீா் சோதனைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சியின் தலைமை கண்காணிப்பு காவல் அதிகாரி ரஜ்பீா்சிங் கூறியதாவது:

பெங்களூரில் கரோனா நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக கண்காணிப்புக் காவலா்கள் கொண்ட 54 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சந்தைப் பகுதிகளில் அதிக அளவில் கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்படுவா். விழாக்காலமாக இருப்பதால் மக்களின் நடமாட்டம், குறிப்பாக சந்தைப் பகுதிகளில் மக்கள்கூடுவது அதிகமாகிவிட்டது. எனவே, கன்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 250 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், மக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். 2020-ஆம் ஆண்டு மே முதல் முகக் கவசம் அணியாத 5.04 லட்சம் பேரிடம் இருந்து ரூ. 12.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.