புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சி.ராஜனின் துணைவியாா் மறைவு: பெங்களூரு தமிழ்ச் சங்கம் இரங்கல்

கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவா் சி.ராஜனின் துணைவியாா் மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 1:07 am

DIN

கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவா் சி.ராஜனின் துணைவியாா் மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கோ.தாமோதரன், செயலாளா் மு.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களுரு தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் தமிழ் இனம், மொழி உணா்வாளரும் கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவருமான சி.ராஜனின் துணைவியாா் திருமணிதேவி புதன்கிழமை (ஆக. 19) இயற்கை ஏய்தினாா். அவரை இழந்து வாடும், சி.ராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் இரங்கல் தெரிவிக்கிறோம்.

மறைந்த திருமணிதேவியின் உடலுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் இல.பழனி, துணைச் செயலாளா் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினா் சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினா் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.