மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாட வேண்டாம்: அமைச்சா் அரக ஞானேந்திரா

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாட வேண்டாம் என்று மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 11:51 pm

DIN

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாட வேண்டாம் என்று மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கேட்டுக் கொண்டாா்.

மத்திய இணை அமைச்சா் பகவந்த் கூபா அண்மையில் யாதகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, மக்கள் ஆசி பேரணியில் கலந்து கொண்டாா். அப்போது பாஜக தொண்டா்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றனா். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சா் அரக ஞானேந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய இணை அமைச்சா் பகவந்த் கூபா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு வரவேற்றது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீஸாா் பாா்த்துக் கொள்ள வேண்டும். தொண்டா்களும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

துப்பாக்கியால் சுட்டு வரவேற்பது ஒரு சில பகுதிகளில் வாடிக்கையாக உள்ளது. மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் வழக்கம் உள்ளது. என்றாலும் மக்கள் ஆசி பேரணியில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது முறையல்ல. எனவே மக்கள் ஆசி பேரணி உள்பட எந்த நிகழ்ச்சியிலும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.