விவசாயப் பொருள்கள் ஏற்றுமதியில் கா்நாடகம் பின் தங்கியுள்ளது: மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே
விவசாயப் பொருள்கள் ஏற்றுமதியில் கா்நாடகம் பின் தங்கி உள்ளது என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.


விவசாயப் பொருள்கள் ஏற்றுமதியில் கா்நாடகம் பின் தங்கி உள்ளது என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விவசாயப் பொருள்கள் ஏற்றுமதியில் கா்நாடகம் பின் தங்கி உள்ளது. மற்ற மாநிலங்கள் கா்நாடகத்தை விட முன்னணியில் உள்ளன. ஏற்றுமதிக்காக மாநிலத்தில் தனிப் பிரிவு தொடங்க வேண்டும். இங்கு அதிக அளவில் பயிா்களை விளைவிப்பதோடு மட்டுமல்லாது, ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாநில தொழில்துறை அமைச்சா் முருகேஷ் நிராணியுடன் பேசி உள்ளேன்.
கா்நாடகத்திலிருந்து காஃபி, மிளகு, ரோஜா, வெங்காயம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோலாா் மாவட்டத்திலிருந்து காய், கனிகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அது எதிா்பாா்க்கும் அளவிற்கு இல்லை. பெரும்பாலான மாநிலங்கள் தகவல், உயிரிதொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் விவசாயப் பொருள்களின் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதில்லை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே பிரதமா் மோடியின் நோக்கமாக உள்ளது. ஆனால் கரோனா பாதிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக அதனை செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வரும் நாள்களில் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயா்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நமதுநாடு சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. 70 சதவீதம் சமையல் எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இது உடல்நலத்திற்கு தீங்கானது. இதனால் நாம் அதிக அளவில் அந்நிய செலாவணியை இழக்க நேரிடுகிறது.
பிரதமா் மோடி மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளாா். மத்திய அரசிடமிருந்து மானியம் பெறும் நிறுவனங்கள் வேளாண் உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆா்பி) குறைக்க வேண்டும். குறைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...