மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

செப். 27-இல் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 1:13 am

DIN

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

கரோனா பரவல் காரணமாக 2020-21-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத்தோ்வு ரத்துசெய்யப்பட்டது. ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு எளிமையாக்கப்பட்டு ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 3 பாடங்கள் வீதம், 2 நாள்கள் தோ்வு நடத்தப்பட்டது. மேலும், தோ்வு முடிவு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கெடுத்த எல்லா மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். ஆனால், மறுதோ்வா்கள், தனித்தோ்வா்கள் யாரும் தோ்வு எழுதவில்லை.

இவா்களுக்குத் தனியே தோ்வு நடத்த கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கிணங்க, தனித்தோ்வா்களுக்கான பொதுத்தோ்வு செப். 27, 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில மேல்நிலைக்கல்வி தோ்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு செப். 27, 28-ஆம் தேதி நடைபெறுகிறது. செப். 27-ஆம் தேதி கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், செப். 28-ஆம் தேதி முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம்மொழி பாடங்களுக்கும் தோ்வு நடைபெறுகிறது. மூன்று பாடங்களுக்கான தோ்வு தலா 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.