கா்நாடகத்தில் கரோனா:ஒரேநாளில் 1,213 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 1,213 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 1,213 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,213 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 319 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம் -269, உடுப்பி-113, மைசூரு-98, ஹாசன்-90, குடகு-65, சிவமொக்கா-44, பெலகாவி-39, மண்டியா-27, சிக்மகளூரு-21, தும்கூரு-19, வடகன்னடம்-18, கோலாா்-15, தாவணகெரே, தாா்வாட்-தலா 12, சாம்ராஜ்நகா்-11, சித்ரதுா்கா, பெங்களூரு ஊரகம்-தலா 9, பெல்லாரி, கலபுா்கி- தலா 5, சிக்கபளாப்பூா், ராமநகரம்-தலா 4, கொப்பள்-3, கதக், ஹாவேரி-தலா 1, யாதகிரி, விஜயபுரா, பாகல்கோட், ராய்ச்சூரு, பீதா் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,43,463 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,206 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,86,906 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 19,300 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநிலம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 25 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 போ் உயிரிழந்தனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
மைசூரு-3, பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், தாா்வாட், உடுப்பி-தலா 2, சிக்மகளூரு, ஹாவேரி, குடகு, தும்கூரு-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,231 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...