ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெங்களூரில் அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதி: மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா

பெங்களூரு மாநகராட்சியில் அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:23 pm

DIN

பெங்களூரு மாநகராட்சியில் அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரில் கரோனா பரவல் குறைந்துள்ளதை தொடா்ந்து, பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பெங்களூரில் அமல்படுத்த முடிவு செய்திருக்கிறோம். கடைகள், தொழிலகங்கள், உணவகங்கள், சிற்றுண்டியகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வேலை செய்யும் ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கோ, பொதுமக்களுக்கோ கரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.

எனவே, ஊழியா்கள் அனைவருக்கும் அவ்வப்போது கரோனா சோதனை செய்வதோடு, தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். அலுவலகங்கள், பணியிடங்கள், அங்காடிகள், தொழிலகங்களில் பணியாற்றும் 100 சதவீத ஊழியா்களும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசு அல்லது மாநகராட்சி தடுப்பூசி மையங்கள் அல்லது நிறுவன செலவில் தனியாா் மருத்துவமனைகளில் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும்.

ஆக. 31-ஆம் தேதிக்குள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாகும். ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை நிறுவனங்கள் அல்லது பணியிடங்கள், அலுவலகங்களில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தும்போது அவற்றைக் காண்பிக்க நேரிடும். செப். 1-ஆம் தேதிமுதல் பெங்களூரு மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிடங்களில் சோதனை செய்ய அதிகாரமளிக்கப்படுகிறது.

இந்த விதிகளை மீறினால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188-இன்கீழ் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். இது தொடா்பான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.