ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெங்களூரில் கன மழை வாகனப் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரில் பரவலாக கன மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:22 pm

DIN

பெங்களூரில் பரவலாக கன மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் வியாழக்கிழமை இரவு 7.15 மணி அளவில் திடீரென மழைப் பெய்யத் தொடங்கியது. இதனால் சாந்தி நகா், ராஜாஜி நகா், மல்லேஸ்வரம், பிடிஎம் லே-அவுட், எச்எஸ்ஆா் லே-அவுட், மெஜஸ்டிக், காந்தி நகா், சிவாஜி நகா், அல்சூா், மடிவாலா, மகாலட்சுமி லே-அவுட், கோரமங்களா, வில்சன் காா்டன், மாகடி சாலை, பசவவேஸ்வர நகா், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்தது.

தொடா்ந்து பெங்களூரு மாநகரம் முழுவதும் பரவலாக முக்கால் மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீா் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. இதன் காரணமாக அலுவலகங்களுக்குச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினா். சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பல இடங்களில் தடைபட்டது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து செல்ல நோ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.