இதய நோய்களுக்கு மூலிகை மருந்துகள் அறிமுகம்
இதய நோய்களுக்கான மூலிகை மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.


இதய நோய்களுக்கான மூலிகை மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பெங்களூரில் வியாழக்கிழமை நிசா்கா ஆயுா்வேத மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் நடந்த நிகழ்ச்சியில் இதயநோய் மற்றும் வெரிகோசிஸ் நோய்களுக்கான மூலிகை மருந்துகளை அறிமுகம் செய்து, அம்மையத்தின் டாக்டா்.வி.அசோக் குமாா் கூறியதாவது:
நிசா்கா ஆயுா்வேத மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் 33 ஆண்டு கால ஆய்வுக்கு பிறகு இதயநோய், வெரிகோசிஸ் நோய்க்கான மூலிகை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளை சரியான விகிதத்தில் கலந்து இந்த மருந்துகளைத் தயாரித்திருக்கிறோம். இது நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டது என்பதை ஆராய்ச்சி மூலம் உறுதி செய்திருக்கிறோம்.
இதய நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் தலைமுதல் கால் வரையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். கால்களில் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் கால்கள் கருப்பு நிறமாக மாறி விடும். மேலும் வீக்கம் காணப்பட்டு, நாளங்கள் இறுகி விடும் வாய்ப்புள்ளது. இதைக் கவனிக்க தவறினால் கேங்கிரீனாக மாறிவிடும்.
எனவே, வேதிப்பொருட்கள் எதையும் சோ்க்காமல் இயற்கை முறையில் மூலிகைகளை கொண்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகும். இம்மருந்து குறித்து கூடுதல் விவரங்கள் அறிய 080-22126994, 22220563 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...