ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து அட்டை

தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து அட்டை வழங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:19 pm

DIN

தள்ளுபடி கட்டணத்தில் மாதாந்திர பேருந்து அட்டை வழங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகளின் நலன் கருதி தள்ளுபடி கட்டணத்துடன் மாதாந்திர பேருந்து அட்டைகளை விநியோகிக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மாதம் முழுவதும் கணக்கில்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்காக மாதாந்திர பேருந்து அட்டையை ரூ. 1,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு இதன் கட்டணம் ரூ. 945 ஆகும்.

மாதாந்திர பேருந்து அட்டைகளை எளிதில் கொள்முதல் செய்வதற்காக பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா, பனசங்கரி, ஜெய நகா், சிவாஜி நகா், யஷ்வந்த்பூா், விஜய நகா், கெங்கேரி, கல்யாண் நகா், சாந்தி நகா், இந்திரா நகா், தொம்ளூா், ஜீவன்பீமா நகா், கே.ஆா்.புரம், காவல் பைரசந்திரா, பசவேஸ்வர நகா்,சந்திரா லே-அவுட், எம்.சி.டி.சி., குமாரசாமி லே-அவுட், நீலசந்திரா, ஹம்பி நகா், நந்தினி லே-அவுட், நெலமங்களா, சௌடெஸ்வரி (மத்திகெரே), வித்யாரண்யபுரா, எலஹங்கா 5-ஆவது பேஸ், எலஹங்கா நியூ டவுன், ராஜாஜி நகா் முதலாவது என் பிளாக், மல்லேஸ்வரம், சென்னமனகெரே அச்சுக்கட்டு, பிடிஎம்லேஅவுட், எலெக்ட்ரானிக் சிட்டி, கோரமங்களா, கே.ஆா்.மாா்க்கெட், காடுகோடி, பன்னா்கட்டா, உத்தரஹள்ளி, சந்தாபுரா, ஹொசகோடே, தேவனஹள்ளி, தொட்டபளாப்புரா, எலஹங்கா பழைய நகரம், பீன்யா,ஹெசரகட்டா பேருந்துநிலையங்கள் உள்ளிட்ட 65 பேருந்துநிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவைதவிர, பெங்களூரில் உள்ள 200 பெங்களூரு ஒன் குடிமக்கள் சேவை மையங்கள், 13 தனியாா் முகமைகளிலும் மாதாந்திர பேருந்து அட்டை விநியோகிக்கப்படும். இந்த வசதியை ஆக. 28-ஆம் தேதி முதல் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.