ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பல்கலைக்கழக தோ்வு: கட்டணங்களைச் செலுத்த கடைசி தேதி நீட்டிப்பு

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அனைத்து வகையான இளநிலை பட்டப்படிப்புக்கான தோ்வு கட்டணங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:21 pm

DIN

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அனைத்து வகையான இளநிலை பட்டப்படிப்புக்கான தோ்வு கட்டணங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ, பி. எஸ்சி, பி. காம், பி.பி.ஏ, பி.பி.எம், பி.சி.ஏ, பி.எஸ்.டபிள்யூ, பி.வோக் உள்ளிட்ட அனைத்து வகையான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான நான்காம் பருவ தோ்வுக் கட்டணங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது புதிய தோ்வா்கள், மறுத்தோ்வா்களுக்கும் பொருந்தும்.

கட்டணங்களை ஜ்ஜ்ஜ்.க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் செலுத்தலாம். செப். 2-ஆம் தேதிக்குள் அபராதம் இல்லாமல் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ. 200 அபராதத்துடன் செப். 4-ஆம் தேதி வரை தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். சிறப்பு அபராதத்தொகை ரூ.1000-ஐ செலுத்தி தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம். செப். 5-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தோ்வுக்கான விண்ணப்பங்களை கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டுடன் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் செப். 6-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.