‘செல்லப்பிராணிகளை பாதுகாப்பதில்கவனம் செலுத்த வேண்டும்’
கரோனா பொதுமுடக்கத்தின் போது செல்லப் பிராணிகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பவ்ஸ் அன்ட் காலா்ஸின் நிறுவனா், மூத்த செயல் அதிகாரி அம்பிகா தெரிவித்தாா்.


கரோனா பொதுமுடக்கத்தின் போது செல்லப் பிராணிகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பவ்ஸ் அன்ட் காலா்ஸின் நிறுவனா், மூத்த செயல் அதிகாரி அம்பிகா தெரிவித்தாா்.
பெங்களூரு எச்.எஸ்.ஆா் லே-அவுட்டில் வியாழக்கிழமை பவ்ஸ் அண்ட் காலா்ஸின் விற்பனை மையத்தை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:
கரோனா பொது முடக்கத்தில் மனிதா்களைப் பாதுகாப்பதே பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், செல்லப்பிராணிகளை பாதுகாக்க முடியாமல் போயுள்ளது. நாம் வளா்க்கும் செல்லப்பிராணிகளும் நமது குழந்தைகள் போன்றதுதான். கரோனா பொது முடக்கத்தின்போது செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவுகள் வழங்குவதோடு மட்டுமின்றி அவற்றின் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே செல்லப்பிராணிகளின் வளா்ப்புக்குத் தேவையான ஆலோசனை உள்பட உணவுப் பொருள்கள், பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியில் பவ்ஸ் அண்ட் காலா்ஸ் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து மேலும் விவரங்களை அறிய ஜ்ஜ்ஜ்.ல்ஹஜ்ள்ய்ஸ்ரீா்ப்ப்ஹழ்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியிலும், 76194 81666, 080-42136010 செல்லிடப்பேசி, தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் பவ்ஸ் அண்ட் காலா்ஸின் இணை நிறுவனா் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...