டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2020-21-ஆம் கல்வியாண்டில் கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் 121 அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்எஸ்எல்சி தோ்வில் தோ்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றுள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் கையேட்டை ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்://க்ற்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதளங்களில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பாடப்பிரிவுகள், விண்ணப்பக் கட்டணம், தகுதிச் சான்றிதழ்கள் குறித்த விவரங்களையும் இந்த இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 3 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் செலுத்தி, சோ்க்கை பெறலாம்.
விண்ணப்பத்துடன் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் ரூ. 50, பொதுப்பிரிவினா் ரூ.100 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
சோ்க்கை பெறும் மாணவா்களிடம் இருந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ. 4,270-ம், அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ. 6,680-ம், தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ. 12,830-ம் கல்விக்கட்டணமாக வசூலிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 96638-76868 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...