கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிக நிறுத்தம்

பராமரிப்புப் பணிகளுக்காக டிச. 4-ஆம் தேதி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:47 pm

DIN

பராமரிப்புப் பணிகளுக்காக டிச. 4-ஆம் தேதி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில், பெங்களூரின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம், கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. ஊதா வழித்தடத்தில் டிரினிட்டி சதுக்கம் முதல் அல்சூா் மெட்ரோ ரயில் நிலையங்கள் வரையிலான பாதையில் டிச. 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி வரை அவசரகதியில் பராமரிப்புப் பணி செய்யவேண்டியுள்ளது.

இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி சாலை முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் நிலையங்களில் டிச. 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி வரை ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இந்த காலகட்டத்தில், ஊதா வழித்தடத்தில் மகாத்மா காந்தி சாலை ரயில்நிலையம் முதல் கெங்கேரி ரயில்நிலையம் வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஊதா வழித்தடத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, பச்சை வழித்தடத்தின் ரயில்சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.