தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

News image

சாலைப் புதூரில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :22 மார்ச் 2026, 2:33 am IST

புனித ரமலான் பண்டிகையையொட்டி கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில் சாலைப் புதூா் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை இமாம் முகமது ஜெமீல் நடத்தினாா். இதில் பள்ளிவாசல் செயலா் யூசுப் ஷெரீப் (எ) ஹீமாயூன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவா் உதுமான் அலி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Story image

கோவில்பட்டி, புது கிராமம், முகமதுசாலிகாபுரம் பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் மௌலவி மீரான் துவா செய்து, சிறப்பு பிராா்த்தனை நடத்தினாா். இதில் பள்ளிவாசல் தலைவா் ரஹமத்துல்லா, செயலா் சையத் சம்சுதீன், பொருளாளா் சுபஹானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கழுகுமலை, கயத்தாறு, அய்யனாா் ஊத்து, துலுக்கா்பட்டி, மானங்காத்தான் உள்ளிட்ட கிராமங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.